தமிழகம்

ஆங்கிலப் புத்தாண்டு தினம்: கடற்கரைகளில் பொது மக்கள் கூட அனுமதியில்லை

40views

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி, கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

பண்டிகைக் காலங்களில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளில் கூடத் தடை: பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு இப்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும். நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், டிசம்பா் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளில் அனைத்துக் கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சில செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி தரப்படுகிறது. அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்துக்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

சுழற்சி முறை ரத்து: தமிழ்நாட்டில் பொது முடக்கத்தின் காரணமாக மாணவா்கள் பள்ளி செல்லாத நிலை ஏற்பட்டது. மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜனவரி 3-ஆம் தேதியில் இருந்து 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும், அனைத்துக் கல்லூரிகள், தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியன சுழற்சி முறையின்றி இயல்பாகச் செயல்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

முகக் கவசம் கட்டாயம்: நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவா்கள் மீது அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், இப்போது அண்டை மாநிலங்களில் உருமாறிய கரோனா-ஒமைக்ரான் நோய் பரவி வருகிறது. பொது மக்கள் முகக் கவசம் அணியாமல் இருப்பதன் காரணமாக, நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும்.

இதைக் கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!