இந்தியா

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

79views

க்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தானாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இனி இந்த விவகாரங்களை தாங்களே விசாரிப்பதாக அறிவித்திருந்து. இந்நிலையில், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணை வந்தது.

அப்போது, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாள்வதற்காக பாராட்டுகளை பெற்று வருவதாக மத்திய அரசு சொலிசிட்டர் துஷார் மேத்தா கூறினார். மற்ற பகுதிகள் பிரச்சினையை சந்தித்து வரும் நேரத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் இது ஒட்டு மொத்த நாட்டின் நலன் சார்ந்த பிரச்சனை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கீழ்வரும் ராணுவ மருத்துவத்துறை, ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை எல்லாம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நாடு முழுவதும் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு, அதனை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யும் முறைகள் மற்றும் மருத்துவமனைகளின் நிலைமைகள் என்ன ? என்றும் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்து பொருட்கள் எவ்வளவு கையிருப்பில் உள்ளது ? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தடுப்பூசிக்கான கொள்முதல் விலை மற்றும் விநியோக விலை என்ன ?, என்றும் கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? என அடுக்காக கேள்விக்கனைகளை நீதிபதிகள் தொடுத்தனர்.

இது குறித்த முழுமையான விவரங்கள அடங்கிய பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!