சினிமா

அருள்நிதி நடிக்கும். ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2

71views

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2 திரைப்படம் உருவாக உள்ளது.

ஞானமுத்து இயக்கத்தில் 2015-ம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்துக்கு இதுவே முதல் திரைப்படமாகும். இவர் முதல் படத்திலேயே நல்ல வெற்றியைக் கண்டார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது.

இத்திரைப்படத்திற்கு பிறகு அஜய் ஞானமுத்து நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் விக்ரமுடன் கோப்ரா உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. அருள்நிதி தற்போது தான் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இத்திரைப்படம் குறித்து கூடிய விரைவில் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!