இந்தியா

அருணாச்சலில் பெயர் மாற்றம் சீனாவுக்கு அமைச்சர் கண்டனம்

45views

“அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு வெளிநாட்டினரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டால், அதை யாராலும் ஏற்க முடியாது,” என, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.எல்லை பிரச்னை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது.

லடாக்கின் கிழக்கு எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இதற்கிடையே நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை உரிமைக் கொண்டாடி வரும் சீன அரசு, அங்குள்ள 15 இடங்களுக்கு சீன, திபெத்திய மற்றும் ரோமானிய மொழிகளில் பெயர் மாற்றம் செய்து சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான கிரண் ரிஜிஜு நேற்று பங்கேற்றார்.நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு நம்மால் சூட்டப்பட்ட பெயர்கள் மட்டுமே அனைவராலும் ஏற்கப்படும். அந்த பாரம்பரிய பெயர்கள் என்றும் நிலைத்திருக்கும். அது நம் பெற்றோர் நமக்கு வைத்த பெயரைப் போன்றது.அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு வெளிநாட்டினர் பெயர் மாற்றம் செய்து அறிவித்தால், அதை யாராலும் ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!