அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி
191views
அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card முதல் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் இன்று வழங்கப்பட்டது
இன்ஷா அல்லாஹ் அதன் தொடக்க விழா நிகழ்வு இன்று நாள் 04/06/2021 வெள்ளிக்கிழமை கார்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று காலை 9 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள Mezzanine Floor-ல் மிக சிறப்பானமுறையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் மற்றும் அய்மான் பைத்துமால் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்களும் தொடங்கிவைத்தார்கள்
மேலும் இன்நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி, பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,துணைப் பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா,நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், மக்கள் தொடர்புச் செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன்,நிர்வாக செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஏ.ஹெச்.சயீத் முஹம்மது பாசில் மற்றும் விழாக் குழு செயலாளர் காயல் ஏ.ஆர்.ரிபாயி சுல்தான் அவர்களும் உடன் இருந்தார்கள்.
-
அய்மான் சங்கம், அபுதாபி.