இந்தியா

அயோத்தியில் யோகி ஆதித்யநாத்; தேர்தல் குழு விரைவில் முடிவு

47views

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிட பா.ஜ., தேர்தல் குழு முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிப்., 10 முதல் மார்ச், 7 வரை பல கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில், உத்தர பிரதேசத்தில் பிப்., 10 மற்றும் 14 தேதிகளில் நடைபெற உள்ள முதல் இரு கட்ட தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் தேர்வு பணிகள் தொடங்கி உள்ளன.வேட்பாளர்களை இறுதி செய்ய, பிரதமர் நரேந்திர மோடி உட்பட கட்சியின் மத்திய தேர்தல் குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அயோத்தி தொகுதியில் களமிறக்க கட்சியில் விவாதிக்கப்பட்டு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.தற்போது எம்.எல்.சி.,யாக இருக்கும் யோகி ஆதித்யநாத், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்தால் எந்த தொகுதியில் போட்டியிடவும் தயாராக உள்ளதாக சமீபத்தில் கூறி இருந்தார்.அயோத்தி, மதுரா மற்றும் பலமுறை அவர் லோக்சபா உறுப்பினராக தேர்வான கோரக்பூர் ஆகியவை, அவரது விருப்பத்திற்குரிய தொகுதிகளாக கருதப்படுகிறது.ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அயோத்தியில் பா.ஜ.,வின் அரசியல் ஆளுமை உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே, யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதியாக அயோத்தி இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!