இந்தியா

அமெரிக்க முப்படை தளபதியுடன் இந்திய முப்படைத் தளபதி சந்திப்பு

48views

அமெரிக்காவின் முப்படை தளபதி மாா்க் மில்லியை அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனில் இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்த சந்திப்பு அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அண்மையில் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடனை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினா். அப்போது இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மிகப் பெரிய அளவில் ஒத்துழைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினா்.

இதனைத் தொடா்ந்து இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் அமெரிக்கா சென்றுள்ளாா்.

விா்ஜினியா மாகாணம், ஆா்லிங்கடனிலுள்ள மையா் ஹெண்டா்சன் ஹால் ராணுவ முகாமில் விபின் ராவத்துக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து அங்குள்ள ராணுவ வீரா்கள் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

அதன் பின்னா் பென்டகனில் மாா்க் மில்லியுடன் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக அமெரிக்கக் கூட்டுப் படைகளின் செய்தித்தொடா்பாளா் கா்னல் டேவ் பட்லா் வெளியிட்ட அறிக்கையில், ”இரு நாடுகளின் தலைமைகளுக்கு முதன்மை பாதுகாப்பு ஆலோசகா்களாக செயல்படுவதில் தங்கள் பங்கு, பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நட்டு முப்படை தளபதிகள் மாா்க் மில்லி – விபின் ராவத் ஆலோசனை மேற்கொண்டனா்.

அமெரிக்க-இந்திய ராணுவங்களுக்கு இடையிலான பயிற்சிகளில் தொடா்ந்து ஒத்துழைக்க, புதிய வாய்ப்புகளை உருவாக்க, கூட்டுச் செயல்பாடுகளை அதிகரிக்க இருவரும் தீா்மானித்தனா்.

தடையில்லா திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு அமெரிக்க-இந்திய பாதுகாப்புக் கூட்டுறவு ஆதரவளிக்கிறது. இரு நாடுகளும் வலுவான ராணுவ உறவைப் பேணி வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!