உலகம்

அமெரிக்க தூதர் மசூத் கான் நியமனம்: ஜோ பைடன் ஏற்க மறுப்பு

37views

பாகிஸ்தானின் அமெரிக்க தூதராக மசூத்கான் நியமனத்தை அதிபர் ஜோபைடன் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் அமெரிக்க தூதராக பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான மசூத்கான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் நியமித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

மசூத் கான் செயல்பாடுகள் பயங்கரவாத ஆதரவு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு குறித்து அமெரிக்க எம்.பி., அறிக்கை அளித்தார். இதையடுத்து மசூத்கான் நியமனத்தை உடனே ரத்து செய்யுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதாக மத்திய அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!