உலகம்

அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளிப் பெண் நீரா தாண்டன் நியமனம்…

121views

மெரிக்க ஜனாபதி ஜோ பைடன் தனது அரசின் பல முக்கிய பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினரை தெரிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தார்.

இவரின் இந்த நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். இருப்பினும் செனட் சபையில் இதற்கான ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தனது மூத்த ஆலோசகராக நீரா தாண்டனை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் நீரா தாண்டன் பரக் ஒபாமாவின் மூத்த ஆலோசகராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!