உலக அளவில் அமெரிக்க மக்கள் பெரும்பாலும் குளிரில் மற்றும் மிதமான வெயிலில் வாழ்ந்து வருபவர்கள். அதிகமான வெயில் இவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக தற்போது அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் இதுவரை வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே அதிகமான வகையில் மக்கள் உயிரிழந்து உள்ளனர்.
ஆனால் தற்பொழுது மீண்டும் இந்த கடுமையான வெயில் காரணமாக 95 பேர் உயிரிழப்பு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் நேற்று முதல் போர்ட்லாண்டில் 116 டிகிரி, சியாட்டிலில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவிலும் வெயில் பதிவானது. அதுபோல ஐடஹோ மாகாணம், மான்டானா மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெயில் பதிவானது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு கனடா பகுதிகளில் வெயில் தாக்கத்துக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடும் வெயிலால் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரேகான் மாகாண கவர்னர் கேட் பிரவுன் கூறுகையில், “வெயில் பாதிப்புக்கு இதுவரை ஓரேகான் மாகாணத்தில் 95 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறபோது, இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து இனி இதுபோன்று நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.