உலகம்

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடாக உருவெடுத்தது சீனா

68views

அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடு என்ற அந்தஸ்தை சீனா கைப்பற்றி உள்ளது.

மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

2000-ம் ஆண்டில் 156 லட்சம் கோடி டாலராக இருந்த உலகின் சொத்து மதிப்பு 2020-ல் 514 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக உள்ளது.

சீனா உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக ஆவதற்கு முந்தைய 2000-ம் ஆண்டில் அதன் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருந்தது. 2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா உலகின் பெரும்பணக்கார நாடாக மாறியுள்ளது.

இதே காலத்தில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. மேலும் உலகின்மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் 10 நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது.

உலகின் முன்னணி பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா இரண்டிலும் அவற்றின் மூன்றில்இரண்டு மடங்கு சொத்துகள் வெறும் 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மொத்த சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மீதமுள்ளவை உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவுசார் சொத்துகள், காப்புரிமைகளில் உள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!