உலகம்

அமெரிக்காவில் கொரோனா அதிஉச்ச கோரத்தாண்டவம்- ஒரு நாள் பாதிப்பு 5,57,425

78views

அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,57,425 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,825 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,107,624. ஒரே நாளில் 6,323 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 695,711 பேர் மீண்டுள்ளனர்.

உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 557,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரான்சில் 271,686 பேருக்கும் இங்கிலாந்தில் 218,724 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் 170,844 பேருக்கும் ஸ்பெயினில் 117,775 பேருக்கும் அர்ஜென்டினாவில் 81,210 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 8-வது இடத்தில் இருக்கிறது. பல மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,729 ஆக பதிவாகி இருக்கிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!