அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட 60 மில்லியன் அஸ்டாரா ஜெனிகா தடுப்பூசிகளை அவசர தேவைக்காக பாதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு சபை தடுப்பூசிகளை நிலைமையினை ஆராய்ந்த பின்னர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 10 மில்லியன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 50 மில்லியன் தடுப்பூசிகளை மே மற்றும் ஜுன் மாதங்களில் ஏற்றுமதி செய்வதற்கு முடியுமென வெள்ளை மாளிகையில் ஊடக சந்திப்பின் போது அதன் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவது எந்த நாடுகளுக்கு எவ்வாறான கட்டுப்பாடுகள் என்பன இன்னும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.