உலகம்

அமெரிக்கா மீது சைபர் தாக்குதல், அவசர நிலையை அறிவித்தது பைடன் அரசு

60views

மெரிக்காவின் (America) மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னர் பிடென் நிர்வாகம் அவசரநிலையை அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல் காரணமாக ஒருநாடு அவசரநிலை விதித்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

சைபர் தாக்குதலைக் கொண்ட கோலோனியல் பைப்லைன் நிறுவனம் தினமும் 2.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை சப்ளை நிபுணர்கள் கூறுகின்றனர்.  அதாவது, அமெரிக்காவின் கிழக்குகடற்கரையில் உள்ள மாநிலங்களுக்கு குழாய் வழியாக 45 சதவீதம் பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிவாயுக்கள் இங்கிருந்து தான் அனுப்பப்படுகின்றன

இந்த சைபர் தாக்குதலின் காரணமாக, திங்களன்று எண்ணெய் விலை 2-3 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஊடக அறிக்கைகளிலும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா தொற்றுநோயால் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பெரும்பாலான பொறியியலாளர்கள் தற்போது வீட்டிலிருந்து கணினிகளில் வேலை செய்வதால், பாதுகாப்பு குறைபாடு காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ransomware தாக்குதலை டார்க்சைட் (Darkside) என்ற சைபர்-கிரிமினல் கும்பலால் நடத்தப்பட்டதாக பல அமெரிக்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன, அதில் அவர்கள் 100 ஜிபி தரவை திருடிச் சென்றுள்ளனர். இதுதவிர, ஹேக்கர்கள் சில கணினிகள் மற்றும் சர்வர்களில் தரவுகளை லாக்செய்து, அதை நீக்கவேண்டும் என்றால் பணம் கொடுக்கவேண்டும் என மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கப்படவில்லை என்றால், இந்தத்தரவை இணையத்தில் கசியவிடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்.

அதேநேரத்தில், சேவைகளை மீட்டெடுக்க காவல்துறை, இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் எரிசக்தித்துறையுடன் தொடர்பு கொண்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு, தடைபட்டசப்ளையில், சிலஇடங்களில், டெலிவரி பாயிண்ட்வரை சில சிறிய இணைப்புகள் செயல்படத் தொடங்கியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!