189views
அமீரக தமிழர் வாலிபால் கிளப் சார்பில் முதலாண்டு கைப்பந்து போட்டிகள் துபாய் சிலிகான் ஒயாஸிஸ் பகுதியில் உள்ள பிரெஞ்சு பள்ளிக்கூட மைதானத்தில் 16 அணிகள் நாக் அவுட் முறையில் மோதிய விளையாட்டு போட்டி நடைபெற்றது.
3 செட்களாக வலம் வந்த இந்த போட்டியில் பிக் மார்ட் அணி அதிக புள்ளிகள் எடுத்து முதல் இடது பெற்றது.
ஓசியன் ஏர் அணி 2 வது இடம் பெற்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு ஆர்யா குழும தலைவர் திரு ஏ.ஆர்.மதியழகன் சார்பில் அந்நிறுவனத்தின் ஆடிட்டர் யுகாமூர்த்தி கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஏராளமான விளையாட்டு அமைப்புகளும், விளையாட்டு வீரர்களும் அனுசரணையாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
add a comment