விளையாட்டு

அதிர்ச்சி! பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு கொரோனா!!

66views

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது .

மூன்று டி 20, 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த 9 ஆம் தேதி பாகிஸ்தான் சென்றது . 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை .

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர் . இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி கராச்சியில் தொடங்குகிறது .

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . அதில் பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கும் ராஸ்டன் சேஸ் , ஷெல்டன் காட்ரெல் , கைல் மேயர்ஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது .

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் . பாதிக்கப்பட்வர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லை . ஓட்டல் அறையில் அறையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . அவர்கள் தற்போது மருத்துவரின் மேற்பார்வையில் உள்ளனர் .

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!