உலகம்உலகம்செய்திகள்

அதிர்ச்சி !! சீனத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கு கொரோனா..! 20 பேர் உயிரிழப்பு!!

59views

இந்தோனேசியாவில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்குச் சீனாவின் சைனோவாக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

புதிய உருமாறிய வகை தொற்றை எதிர்க்கும் செயல் திறன் இந்தத் தடுப்பு மருந்துக்குக் குறைவு எனக் கூறப்படும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடூஸ் என்னும் நகரில் மட்டும் 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் குறைந்தது மருத்துவர்கள் 20 பேரும், பிறர் 31 பேரும் உயிரிழந்ததாக இந்தோனேசிய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலும் சினோவேக் தடுப்பூசியே போடப்பட்டுள்ளது. உருமாறிய வகை கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக சினோவேக் தடுப்பூசியின் செயல் திறன், பிற தடுப்பூசிகளை காட்டிலும் மிகவும் குறைவு என நம்பப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!