தமிழகம்

அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டத்தில் எல்லாம் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு.!

115views

தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 5ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல்‌ மற்றும்‌ இலங்கையை ஓட்டி நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்க அடுத்த 48 மணி நேரத்தில்‌ தென்‌கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிக்கு நகரக்‌ கூடும்‌. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்‌தில்‌ வடக்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதியாக மாறக்கூடும்‌. இதன்‌ காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கனமழையும்‌, ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, தென்காசி, ராமநாதபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நாளை டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மேலும் வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. வரும் 5ஆம் தேதி கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்‌திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இன்று முதல் வருகின்ற 5ம் தேதி வரை குமரி கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!