வரும் 30-ம் தேதி நாடு முழு வதுமாக மொத்தம் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இடைத்தேர்தல் நடத்தப்படும் மாவட்டம், தொகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சில அரசியல் கட்சிகள், வேட்பாளர் கள் பிரச்சார நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதாக ஆணையத் தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுசம்பந்தமாக அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டம். தொகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கூட இடைத்தேர்தலுடன் நேரடியாக தொடர்புடைய எந்த அரசியல் நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் மாவட்டம், தொகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கரோனாவழிகாட்டுதல்கள் பின்பற்றுப்படு வதை மாவட்ட தேர்தல் அதிகாரி கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.