உலகம்

கத்தார் காயிதேமில்லத் பேரவை நிர்வாகி கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில். எழுதிய 17 நூல்களும் துபாய் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கி சாதனை

291views
துபாய் :
கத்தார் காயிதேமில்லத் பேரவை நிர்வாகி கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எழுதிய 17 நூல்களும் துபாய் முஹம்மது பின் ராஷித் நூலகத்துக்கு ஒரே நேரத்தில் அன்பளிப்பாக வழங்கி சாதனை படைக்கப்பட்டது. இந்த நூல்களை நூலக அலுவலர் அமீரா பஹத் இடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நூலாசிரியர் சார்பில் வழங்கினார்.

கத்தார் நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எனப்படும் கொடிநகரான். பள்ளிக்கூட இறுதிவரை படித்த இவர் இளம் வயதிலேயே கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். இதன் காரணமாக நூல்கள் எழுதுவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.  இவர் எழுதிய தடம் பதித்த தமிழர்கள் – முதல் பாகம், தடம் பதித்த தமிழர்கள் – இரண்டாம் பாகம், இன்னல் தீர்க்கும் இயற்கை வைத்தியம், கொடிநகரானின் சிந்தனை கற்கண்டுகள், கன்னல் கவிச்சோலை, கொடிநகரானின் வெள்ளிச் சிந்தனை, கொடிநகரானின் கவிதைகள், கொடிநகரானின் கவிச்சாரல்கள், கொடிநகரானின் கவித்தூறல்கள், கொடிநகரானின் கவிச்சிதறல்கள், கொடிநகரானின் கவித்தேடல்கள், கொடிநகரானின் கவிமுகில்கள், கொடிநகரானின் கவிமலர்கள், கொடிநகரானின் கவிவண்ணங்கள், கொடிநகரானின் கவிமாலைகள்,கொடிநகரானின் கவிச்சரங்கள் மற்றும் பாமரனின் ஏடு ஆகிய 17 நூல்களும் சாதனை வெளியீடாக வெளியிடப்பட்டது. இதற்காக பல்வேறு உலக சாதனை பாராட்டுக்களையும் பெற்றார்.
இந்த நூல்கள் அனைத்தும் துபாய் நகரின் பிரமாண்ட நூலகமாக செயல்பட்டு வரும் முஹம்மது பின் ராஷித் நூலகத்துக்கு ஒரே நேரத்தில் அன்பளிப்பாக வழங்கி சாதனை படைக்கப்பட்டது. இந்த நூல்களை நூலக அலுவலர் அமீரா பஹத் இடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நூலாசிரியர் சார்பில் வழங்கினார்.

கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில்
கத்தார் காயிதே மில்லத் பேரவையின் மூத்த நிர்வாகியாகவும் ,கத்தார் சஹாபாக்கள் நூலகத்தில் அங்கத்தினராகவும், கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.  கத்தார் அரசின் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 32 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார். ஹஜ் கமிட்டியின் மூலமாக கடந்த 2001- ல் ஹாஜிகளுக்காக சேவைகள் புரிந்திட ஹஜ் ஊழியனாக புனித பயணம் சென்று வந்துள்ளார்.
சமூக சேவையாக முப்பது முறைக்கும் மேலாக தோஹா விலுள்ள ஹாமத் மருத்துவமனையில் இரத்த சேமிப்பு வங்கியில் ரத்ததானம் செய்துள்ளார். இதற்காக கடந்த 2019 – ல் கத்தார் மக்கள் நல்வாழ்வு சுகாதாரத்துறையின் அமைச்சரிடம் இருந்து சான்றிதழ் மற்றும் அன்பளிப்பும் பெற்றார்.
ஐந்திணை பாவலர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.  கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எனப்படும் கொடிநகரானின் இலக்கிய மற்றும் சமூகப் பணிகளுக்கு தாய்ச்சபையின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!