உலகம்

ஷார்ஜாவில் சர்வதேச யோகா மாநாடு

85views
ஷார்ஜா :
ஷார்ஜா ஸ்கைலைன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கா யோகா பல்கலைக்கழகம், பெங்களூர் ரோட்டரி சங்கம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து சர்வதேச யோகா மாநாடு வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்க இருக்கிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க யோகா பல்கலைக்கழகத்தின் டாக்டர் யோகி தேவராஜ், மகரிஷி வேத அறிவியல் நிபுணர் டாக்டர் பீட்டர் வர்புர்டன், அமீரக தியான நிறுவன இயக்குநர் டாக்டர் மகா எமா, பெல்ஜியம் நாட்டின் வாழ்வியல் ஆலோசகர் தாமஸ் டெ கிரேவ், பிரான்ஸ் ரியூனியன் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் நிலமெகமே ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் டாக்டர் மனஸ் பிரதன் +971505211490, டாக்டர் சரோன் மெண்டோசா +971564848196, டாக்டர் லக்‌ஷ்மிகாந்த் +919886360237 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
யோகா பயிற்சியின் மூலம் சிறப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள உதவும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!