உலகம்

ஷார்ஜா மாணவி எழுதிய முதலாவது ஆங்கில நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது

107views
ஷார்ஜா :
உமையாள் ராமநாதன் (13 வயது), ஷார்ஜாவில் உள்ள அவர் ஓன் ஆங்கில உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு நடனம் ஓவியம் கைவேலைப்பாடு வேலைகள் என அனைத்திலும் சிறந்து விழங்கி வருகிறார். அத்தோடு நிற்காமல் தன்னால் எழுத்திலும் சிறந்து விளங்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக அம்மா வழி தாத்தாவின் ஊக்கம் அளவிட முடியாதது. ஏனென்றால் அம்மா வழி தாத்தாவும் ஒரு எழுத்தாளர். சீத்தலைச்சாத்தன் என்ற புனை பெயரில் நிறைய புத்தகங்களை வெளியிட்டவர். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆன்மிகம் என்று பல வடிவங்களில் எழுத்துக்களை நிலைநாட்டியவர். அரசாங்க நூலகத்திற்கும் அவரின் புத்தகங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
தாத்தாவின் ஊக்கமும் அம்மாவின் ஆதரவும், அவள் நட்புவட்டத்தின் அன்பும் அவளை மேலும் உற்சாகப்படுத்தியது. பள்ளி நோட்டுகளில் நிறைய எழுதுவார். அவரின் நட்பு வட்டங்கள் அதை படித்து விட்டு ஆண்ட்டி அவள் மிகவும் நன்றாக எழுதுகிறாள் அவளை மேலும் தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள் என்று கூறியதின் தாக்கமே அவளின் அம்மாவையும் ஊக்கப்படுத்தி அவளை வழிநடத்தி செல்ல வைத்திருக்கிறது.
ஆங்கில எழுத்தாளராக இந்த சிறுவயதில் வலம் வருவது ஆச்சர்யமே. அவர் எழுதிய முதல் புத்தகம் Against the Shadows ஆகும். இது ஒரு திரில்லர் எமோஷன்ஸ் கலந்த ரோமான்ஸ் கதை புத்தகம் ஆகும். இத்தனை சிறிய வயதில் இந்த அளவிற்கு யோசிப்பது என்பது அசாதரணமான ஒன்று. அம்மா வழித் தாத்தாவின் எழுத்துத் திறமையே அவளுக்கு கடவுளின் அருளால் கிடைத்திருக்கிறது எனறு நினைக்கும் போது மிகவும் பெருமையாகத் தான் இருக்கின்றது.
ஒரு கதையின் கருவை மனதினில் உருவாக்கி அதற்கு என்று ஒரு உருவம் கொடுத்து பின்பு உயிரையும் தந்து ஒரு ஜீவனாக இந்த மண்ணில் தவழவிடுவது என்பது மிகப்பெரிய செயல். அதை அசாதரணமாக இருபதே நாட்களில் எழுதி அச்சிற்கு ஏற்றி நான்குமுறை திருத்தம் செய்து அதை புத்தகமாக வாங்கிய அந்த நொடி எண்ணற்ற மகிழ்ச்சி கடலில் திளைத்தநொடியே ஆகும்.
செல்வி உமையாள் ராமனாதன் தான் எழுதிய இப்புத்தகத்தை தன் தாய்வழி தந்தையான எழுத்தாளர் சீத்தலைசாத்தன் அவர்களுக்கு சமர்ப்பித்து பெருமைசேர்த்ததோடு மட்டும் இல்லாமல் தான் எழுதுவதற்கு பெரிய ஈர்ப்பாக இருந்தவர் தன் தாயார் ஜானகி எனவும் குறிப்பிட்டுள்ளது அவரின் அன்பையும் பண்பையும் குறிப்பிடுகிறது.

காரைக்குடியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தன் தாயார் ஜானகி தந்தை ராமனாதன் உடன் தந்தை வழி சிறிய தாயார் சிறிய தந்தையாரின் ஆயிரம்பிறை கண்ட முத்துவிழாவினில் இந்நூலை குடும்பத்தினர் முன்னிலையில் வெளியிட்டார் பெருமை சேர்த்தார்.  இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தாத்தா சீத்தலைச்சாத்தன், பாட்டி, தாயார் ஜானகி, தந்தை ராமநாதன் உள்ளிட்ட குடும்பத்தினர் முன்னிலையில் வெளியிட்டார்.
இனி வரும் காலங்களில் பல புத்தகங்களை படைத்து சாதனை படைத்திட செல்வி உமையாள் ராமனாதனை வாழ்த்திடுவோம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!