உலகம்

பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் அமைப்பின் சார்பில் துபாய் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

101views
பஹ்ரைன் :
பஹ்ரைன் நாட்டிற்க்கு வருகை புரிந்த துபாய் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான முதுவை ஹிதாயத்திற்கு, லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ் சமூக உதவி இயக்கத்தின் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பஹ்ரைன் தலைநகர் கவர்னரேட் 1வது மாவட்ட பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹுசைன் ஜனாஹி லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸின் “கருணை விருது” சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்துக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  பஹ்ரைன் ஊடக நகரத்தின் தலைவர் பிரான்சிஸ், லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ் பிரதிநிதிகள் சையத் ஹனிஃப், ஃபசல் உர் ரஹ்மான்,அன்வர் நிலம்பூர் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
மேலும் மனாமா மற்றும் குதைபியாவில் உள்ள தொழிலாளர் முகாம்களுக்கு லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸின் உணவு மற்றும் பாதுகாப்பு பொருட்களை விநியோகிப்பதிலும் முதுவை ஹிதாயத் பங்கேற்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!