உலகம்

சென்னையில் அமீரக வர்த்தக அமைப்பின் சார்பில் அடுத்த மாதம் வர்த்தக சந்திப்பு அழைப்பிதழ் இந்திய வர்த்தக அமைப்பின் நிர்வாகியிடம் வழங்கப்பட்டது

64views
துபாய் :
சென்னையில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் சிறப்பு வர்த்தக சந்திப்பு அடுத்த மாதம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடக்க இருக்கிறது.  இந்த வர்த்தக சந்திப்புக்கான அழைப்பிதழை பெடரேசன் ஆஃப் இந்தியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி அமைப்பின் பாண்டிச்சேரி மாநில கன்வீனர் சரவணன் சுந்தரமூர்த்தியிடம் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் துபாயில் சந்தித்து வழங்கினார். அப்போது அந்த அமைப்பின் நிர்வாகி நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடக்க இருக்கும் வர்த்தக சந்திப்புக்கு தங்களது அமைப்பு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்றார்.  அதனையடுத்து பேசிய அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், தமிழ் தொழில் முனைவோர்க்கு சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வர்த்தக சந்திப்பு நடக்கிறது. தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலினின் ஒரு டிரில்லியன் பொருளாதார திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இது நடக்கிறது. அமீரக தமிழ் வர்த்தகர்கள் அதிக அளவு முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள இந்த கண்காட்சி உதவியாக இருக்கும்.
இந்த வர்த்தகர் சந்திப்பில் தமிழக அமைச்சர்கள், அரசு மற்றும் தூதரக அதிகாரிகள், தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் டாக்டர் ஏ.எம். விக்ரமராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர் என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஜி.எஸ். மீடியா நிறுவனம் சிறப்புடன் செய்து வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!