உலகம்

ஷார்ஜாவில் நடந்த சர்வதேச யோகா மாநாடு

96views
ஷார்ஜா :
ஷார்ஜா ஸ்கைலைன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா மாநாடு 29.06.2024 சனிக்கிழமை நடந்தது.  சர்வதேச யோகா தினம் கடந்த ஜூன் 21 ஆம் தேதி அமீரகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஷார்ஜாவில் சர்வதேச யோகா மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ரோட்டரி குளோபல் யோகா அமைப்பின் தலைவர் டாக்டர் யோகி தேவராஜ், அமெரிக்க யோகா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு தலைவர் டாக்டர் லக்‌ஷ்மிகாந்த், ரஷ்யாவின் மரியா, பெல்ஜியத்தின் தாமஸ், பிரான்ஸ் நாட்டின் ரியூனியன் பகுதியில் வசித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த யோகாச்சாரியா முனைவர் நீலமேகம், டாக்டர் ராஜா பீட்டர், டாக்டர் எமா மஹா உள்ளிட்டோர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினர்.

குறிப்பாக யோகாவை தினசரி வாழ்க்கையில் ஈடுபடுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெற முடியும் என தெரிவித்தனர். இன்றைய இயந்திர உலகில் நமது வாழ்வில் அன்றாட தேவையாக யோகா இருந்து வருகிறது என கூறினர். கருத்தரங்கில் சமூக ஆர்வலர் ரமாமலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.   மாநாட்டை குலூத் சிறப்புடன் தொகுத்து வழங்கினார்.  ஷார்ஜா ஸ்கைலைன் பல்கலைக்கழகத்தின் அதிகாரி மனஸ் உள்ளிட்ட குழுவினர் யோகா மாநாடு சிறப்புடன் நடக்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!