உலகப் புகழ்பெற்ற கைத்தறி கைலிக்கு பெயர் பெற்ற டி. குண்ணத்தூர் – கைத்தறி நெசவுத்தொழில் அழிந்து வரும் நிலை – தமிழக அரசு நெசவுத் தொழிலை காக்க நெசவாளர்கள் கோரிக்கை.
227views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூர் என்று சொன்னாலே கைலி என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும். மதுரைக்கு மல்லி /நெல்லைக்கு அல்வா /சேலத்துக்கு மாம்பழம் என்பது போல், டி. குன்னத்தூர் என்றாலே உலகப் புகழ்பெற்ற கைலி என்பது யாவரும் அறிந்ததே .
வீடுகள் தோறும் நெசவுத் தொழிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, கைலி தயாரிக்கும் தொழிலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இது நாளடைவில் மின் இயந்திரங்கள் மூலம் தயாரிப்பு, நூல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் கைலிகள் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருவதால் , நெசவுத்தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன் , இதை நம்பி வாழும் குடும்பங்களும் , மாற்று தொழில் தேடி சென்று வருகின்றனர்.
இந்நிலையில் டி. குன்னத்தூரில் கைத்தறி நெசவுத்தொழில் மூலம் தயாரிக்கப்படும் கைலிகள் தமிழகம் மட்டுமன்றி , மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டிலும் ஏற்றுமதி ஆகி வருகிறது.
இது போன்று கைத்தறி நெசவு மூலம் தயாரிக்கப்படும் கைலிகள் நீண்ட நாள் உழைக்கும் என்பதால் , இதனை பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனையாளர்கள் இக்கிராமத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதேபோன்று டி.கல்லுப்பட்டி அருகே பி. தொட்டியபட்டி கிராமத்திலும், இத்தொழிலில் ஏராளமான நெசவாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே இங்கு தயாரிக்கப்படும் தரம் வாய்ந்த கைலிகள் மற்றும் சுங்குடி சேலைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. கைத்தறிவு நெசவு மூலம் தயாரிக்கப்படும் கைலிகள், தயார் செய்யும் நெசவாளர்களுக்கு போதிய கூலி கிடைக்காத நிலையிலும் அவர்கள் தொழிலை விட்டுவிட்டு மாற்றுத் தொழில் தேடி செல்வதாக வேதனையுடன் தெரிவிக்கும் ஜவுளி விற்பனையாளர்கள் , தமிழக அரசு இவர்களுடைய வாழ்வாதாரத்தையும், கைத்தறி நெசவுத் தொழிலைக் காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.










