கவிதை

தங்கத் தலைவன். கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி அவர்களுக்கு தரமான வாழ்த்து

67views
சேவைகள் பலவற்றைச் செய்து அலுப்புத் தட்டாத அற்புதமானவர்
தலைவனாய்த் தொண்டுகள் புரிந்து சிறப்புடன் வாழ்பவர்
சிந்தை முழுக்க சனங்களைப் பற்றியே சிந்தித்தார்
தன்னை மறந்து தன்னலம் கருதாது உயர்ந்தவர்
மனம் இறங்கும் இரக்க குணமவர்
தூங்காது இரவெல்லாம் துணிவோடு பணிசெய்வார்
வஞ்சகமும் போடாது வேசமும் தரிக்காத தலைவர்
பிறர் மகிழ்ச்சியைத் தேடும் மகான் ஆவாரே
தன்னை மறந்த உன்னதமான உத்தமன் அவரே
தமிழ் நாட்டின் தங்கத் தலைவரே
இன்று போல் என்றும் நற்பணி புரிந்திட வே
இறையருள் வேண்டித் துதித்திடும் மகானாவாரே
பழி பல வந்து துவட்டிடும் போதும்
தூணென நிமிர்ந்து துணிவுடன் உழைப்பார்
தன்னம்பிக்கை தன்னையே பலமென கொள்வார்
சினமே வந்தாலும் இனமே மறக்கும் வள்ளலே
நல்லன.யாவும் நிலவிட வேண்டும்
அல்லன யாவும் அருகில் வராமல் விலகி வேண்டும்
பாலென வெள்ளை பளிச்சென்ற மனதுடன் வாழவே
பாவை நானும் பரிவுடன் வாழ்த்துகிறேனே
முகைமினா மூசா,
எழுத்தாளர்.மற்றும் உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடம்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
கிண்ணியா, இலங்கை

2 Comments

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!