தமிழகம்

வணிகர்களைப் பொறுத்தவரை நாங்கள் 18 மணி நேரம் வேலை பார்த்து வருகிறோம். சுழற்சிமுறையில் பிரகாரம் வேலை பார்க்கும் போது 12 மணி நேரம் பார்க்கலாம், இது ஒரு பிரச்சினையாக இருக்காது. நாடு வளர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அரசு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்கிறது. இதையெல்லாம் பரிசீலனை செய்து சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். -தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா வலியுறுத்தல்

42views
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
12 மணி நேர தொழிலாளர் மசோதா குறித்த கேள்விக்கு:
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக 12 மணி நேர வேலை சட்டத்தை மனமுவந்து வரவேற்கிறோம். தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக 12 மணி நேரம் வேலை செய்கிற போது எங்களின் பொருளாதாரம் உயரும், வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும், பல நாடுகளிலிருந்து வேலையை தொடங்கி தருவதற்கு, பல்வேறு நிறுவனங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது, அதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. தொழிலாளர்கள் பிரச்சனை போராட்டம் இல்லாத ஒரு நிலை இருந்தால் தான் மற்ற நாடுகளில் இருந்து வணிகம் செய்வதற்கு, தொழில் தொடங்குவதற்கு ஆர்வமாக வருவார்கள். இது ஆக்கப்பூர்வமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, பல்வேறு அரசியல் கட்சிகள் சில கட்டத்தில் எதிர்ப்புகளை பதிவு செய்து தான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மனதில் இது சரியான தீர்மானம் என்பது புரிந்திருக்கும். நாளை அவர்கள் அமைச்சரை சந்திக்க இருக்கிறார்கள் நல்ல தீர்மானம் எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
தொழிலாளர் சங்க எதிர்ப்பு குறித்த கேள்விக்கு:
12 மணி நேரம் வேலை என்பது இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மூன்று நாள் விடுப்பு என்று சொல்லி இருக்கிறார்கள். இது பெரிய வரப்பிரசாதம். காலை உணவு, மதிய உணவு இடைவேளை என பல்வேறு நேரங்கள் ஒதுக்கப்படுவதால் வேலையில் சுணக்கம் ஏற்படுகிறது. இது போன்று ஊக்கப்படுத்துகிற போது அனைத்து துறைகளிலும் சுணக்கம் இல்லாத வேலை நடக்கக்கூடிய நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் 24 மணி நேர சேவை கோரிக்கை குறித்த கேள்விக்கு:
மதுரை விமான நிலையம் என்பது ஓரளவுக்கு விரிவுபடுத்தி இருக்கிறார்கள், 24 மணி நேர சேவையை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். அருகில் தூத்துக்குடி துறைமுகம் இருக்கிறது. தென் மாவட்டங்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. அனைத்து தென்மாவட்டங்களும் வளர்வதற்கு இது ஊக்கமாக இருக்கும். வருகிற மே 5 வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. அப்போது இதை தீர்மானமாக கொண்டு வர இருக்கிறோம்.
ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இது எப்படி பொருந்தும் என்ற கேள்விக்கு:
சுழற்சிமுறையில் அடிப்படையில் வேலை செய்தாலும் கூட 24 மணி நேரம்தான். வணிகர்களைப் பொறுத்தவரை நாங்கள் 18 மணி நேரம் வேலை பார்த்து வருகிறோம். சுழற்சிமுறையில் பிரகாரம் வேலை பார்க்கும் போது 12 மணி நேரம் பார்க்கலாம் இடையில் உணவு மற்றும் இடைவேளைகள் உள்ளது. இது ஒரு பிரச்சினையாக இருக்காது. நாடு வளர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அரசு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்கிறது. இதையெல்லாம் பரிசீலனை செய்து சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!