தமிழகம்

வேலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் கை நீட்டிய சுகாதார மேற்பார்வையாளர் விஜிலென்ஸ் போலீசாரால் கைது

136views
வேலூர் மாவட்டம் வேலூர் பில்டர் பெட் ரோட்டில் இயங்கும் தனியார் (பிபிஆர்)நர்சிங் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற சுகாதார சான்று சாத்திய சான்று உள்ளிட்ட சான்றுகளை வாங்க வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி ரூ10 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.
இதுகுறித்துநர்சிங் கல்லூரி முதல்வர் சரண்யா லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் அளித்தார்.
அதன்படி வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் விஜய்தலைமையில், கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க காத்திருந்தார்.
காவல்துறையினர் இராசயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை சரண்யாவிடம் கொடுத்தனர்.
பணத்தை வாங்க கிருஷ்ணமூர்த்தி வந்து சரண்யாவிடம் பெற்றபோது மறைந்து இருந்த விஜிலென்ஸ் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.  பின் பணத்தை பறிமுதல் செய்து சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து மேற்கொண்டு முழுமையாக விசாரிக்க மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி மற்றும் துறைசார்ந்த அலுவலர்களை முடிவு செய்துள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!