தமிழகம்

வேலூரில் மாவட்ட அளவிலான மதிப்பீட்டு புலம் சார்ந்த பணிகள் நிறைவு விழா

164views
தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனை 4 – நாட்கள் வேலூர் அடுத்த அடுக்கம்பாறை வெங்கடேஸ்வரா தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
இதன் நிறைவு விழாவில் இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சி.அலமேலு தலைமை தாங்கினார்.
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் என்.ரமேஷ் மற்றும் துணைத்தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாநில கருத்தாளர்கள் ஆர்.கார்த்திகேயன், ஜெ.சுதா ஆகியோர் விளக்கி பேசினார்.  முன்னதாக ஒருங்கிணைந்த கல்விதுறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.மருதமணி வரவேற்றார்.  காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியரும் செய்தி தொடர்பாளருமான க.ராஜா நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!