தமிழகம்

உலக அளவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சிறந்து விளங்கிவருவதாக வேந்தர் ஜி.விசுவநாதன் செய்தியாளர்களிடம் பெருமிதம்

23views
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், பல்லைக்கழக சென்னாரெட்டி கலையரங்கில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கடந்த 1984-ல் 184 மாணவர்களுடன் துவக்கப்பட்ட வேலூர் பொறியியல் கல்லூரி கடந்த 41 ஆண்டுகளில் உலகயளவில் ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கிவருகிறது. விஐடி 4 வளாகங்களில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 2026 – ல் விஞ்ஞானி பட்டியல்களில் உலகயளவில் விஐடி பல்கலைக்கழகத்தின் 96 பேராசிரியர்கள் இடம்பெற்று உள்ளனர். 2026-ல் மட்டும் 99 பேர் இடம்பெற்று உள்ளனர்.
ஒட்டுமொத்த தரவரிசையில் விஐடி 21வது இடம்பிடித்து உள்ளது. ஏழை மாணவர்களின் இலவச கல்விக்கு ரூ.103 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் 11,158 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.14.24 கோடி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.  பேட்டியின்போது துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டா ரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா, மற்றும் பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் ஆகியோர் இருந்தனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!