தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

88views
வேலூர் மாவட்டம் காட்பாடி மிலிடரி சிஎஸ்டி கேண்டீன் அருகே தமிழ்நாட அரசின் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது.  இதில் உள்ள நீச்சல்குளம், உள்விளையாட்டு கூட்டரங்கம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார்.  உடன் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு ,மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கவுன்சிலர் விமலா சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!