தமிழகம்

வேலூர் மாவட்ட அளவிலான 72 -வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 2025 – வில் காட்பாடியில் துவங்கியது. ஆட்சியர், எம்.பி.பங்கேற்பு !!

129views
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் வேலுர் மாவட்ட அளவிலான 72 -வது அனைத்திந்திய கூட்டுறவு 2025 வாரவிழா துவங்கியது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கூட்டுறவு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களும், சுழல்நிதிகளும் வழங்கப்பட்டது. இதில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த். சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமலு, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில்குமார், மண்டல தலைவர் புஷ்பலதா, கூட்டுறவு இணைப்பதிவாளர் திருஐயணதுரை,மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு துறைசார்ந்தவர்கள் என பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!