தமிழகம்

வேலூர் அடுத்த அகட்டுப்புடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

121views
வேலூர் அடுத்த கணியம்பாடி ஒன்றியம் அடுக்கம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட அகட்டுப்புடி செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். சிறப்பு கண்காணிப்பு பார்வையாளராக ஆற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வு துறை அலுவலர் ஜெயபாரதி, வேலூர் தாசில்தார் வடிவேலு, கணியம்பாடி ஒன்றிய குழுத் தலைவர் திவ்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யமூர்த்தி, திருமலை,ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டான்பாஸ்கோ, ஊராட்சி செயலாளர் கணேஷ், துறைசார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!