தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை 2025-க்கு ரூ.3.10 கோடி இந்த ஆண்டு இலக்கு ஆட்சியர் சுப்புலெட்சுமி தகவல்

104views
வேலூர் மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு தீபாவளி 2025 விற்பனையை வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றித்துவக்கிவைத்தார். முதல் விற்பனையை ஆட்சியர் துவக்கி வைக்க வேலூர் மேயர் சுஜாதா பெற்றுக்கொண்டார். இதில் வேலூர் எம் எல் ஏ கார்த்திகேயன், கைத்தறி உதவி இயக்கம் அன்பரசு, மண்டல மேலாளர் (பொ) ரத்னா, தீபம் கிளை மேலாளர் சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆட்சியர் சுப்புலெட்சுமி கூறியதாவது: கே-ஆப்டெக்ஸ் 1935 முதல் செயல்பட்டு வருகிறது. வேலூர் தீபம் கோ-ஆப்டெக்ஸில் சென்ற தீபாவளிக்கு ரூ.232.67 லட்சம் சில்லறை விற்பனை செய்யப்பட்டது. இந்த வருட 2025 தீபாவளிக்கு ரூ.3.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!