தமிழகம்

வேலூரில் இரவு வெளுத்துவாங்கிய மழை – மழைநீருடன் கால்வாய் நீர் : படுகேவலமான மாநகராட்சி நிர்வாகம்

94views
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்துவருகின்றது. 13-ம் தேதி வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  ஆனால் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை வேலூரில் மழை வெளுத்துவாங்கியது.  பழைய பஸ் நிலையம் அருகே, சிஎம்சி மருத்துவமனை அருகில், பேலஸ் எதிரிலும், க்ரீன் சர்க்கிள் பகுதியிலும் மழை வெள்ளம் ஆங்காங்கே தேங்கி கழிவுநீரும் கலந்து நின்றது.

வேலூர் மாநகராட்சியின் கேவலமான செயல்பாட்டால் வேலூரின் பலபகுதிகள் நாறிக்கொண்டு உள்ளன.  மாநகராட்சியின் மெத்தன போக்கே இதற்கு காரணம்.  கமிஷன் ஒன்றே அனைவரின் குறிக்கோளாக இருப்பதால், வேலூர் மாநகராட்சி கேவலமாக இருப்பதாக மாநகரவாசிகள் துப்புகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!