தமிழகம்

வேலூர் அடுத்த கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை குறித்த ஆலோசனை கூட்டம்

187views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 16-ம் தேதி மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம். என்ற பிரச்சார பயணம் செய்ய இருக்கிறார். அதற்கான அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் லத்தேரி மற்றும் கே.வி.குப்பம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரன், காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழிற்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ் சங்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன்,கே.வி குப்பம் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், வேப்பங்கநேரி பஞ்சாயத்து தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொகுதியில் எடப்பாடிபழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என ஆலோசிக்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!