தமிழகம்

வேலூரில் இரும்பு ராடால் தாக்கி கள்ளக்காதலி கொடூர கொலை !

19views
‘வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே.நகரை சேர்ந்த சபீனா பானு (33), இவருக்கும் கொணவட்டத்தை சேர்ந்த சான் பாஷாவுக்கும் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பிரிந்து சென்ற சபீனா பானு 2 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வந்தார்.  அங்கிருந்து சதுப்பேரி ரோட்டில் உள்ள ஷூகம்பெனியில் வேலை செய்துவந்த நிலையில் அங்கு வேலை செய்த விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த சுரேஷ்(35) என்பவனுடன் தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக சுரேஷ் வேலைக்கு செல்லவில்லை…போனில் பேசிவந்த நிலையில் 2 மாதமாக சபீனா போனில் பேசவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், இரவு 11.30 மணியளவில் கள்ளக்காதாலி சபீனா வீட்டுக்கு சென்று தகராறு செய்து எடுத்து சென்ற கத்தியால் வெட்டியதில் பானுசம்பவ இடத்தில் பலியானார். தடுக்க வந்த பானுவின் அம்மா,அப்பாவிற்கு கத்திவெட்டு விழுந்தது. அங்கிருந்த சென்ற சுரேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளான். இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!