தமிழகம்

வேலூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது

36views
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  அதன்படிவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் அப்புதலைமையில் கூடினர்.
ஆனால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றுமறுத்தனர். ஆனால் அதிமுகவினர், திமுக மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சாலையில் அமர்ந்து தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர். இதில் 200 -க்கும் மேற்பட்ட ஆண். பெண் நிர்வாகிகளை கைது செய்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் அப்பு, பொருளாளர் மூர்த்தி, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், முன்னாள்வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் ஆனந்தன், அதிமுக நிர்வாகி சேவூர் ராஜேந்திரன், அடைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், முன்னாள் பிரம்மபுரம் பஞ்சாயத்துதலைவர் புகழ்வேந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!