தமிழகம்

வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் 2 சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு ! கணவர் காயம் !!

115views
வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2-பகுதியை சேர்ந்தவர் ஜான்சன், அவருடைய மனைவி மேரி புஷ்பராணி. ஜான்சன் தனது மனைவியை 2 சக்கர வாகனத்தில் அமர்த்தி கொண்டு வேலூருக்கு நேற்று காலை கிரீன்சர்க்கிள் பகுதியில் சென்றுகொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி 2 சக்கர வாகனத்தை உரசியதில் மேரி தடுமாறி விழுந்ததில் லாரி சக்கரம் ஏறி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
கணவர் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தொடர்ந்து வேலூர் பகுதியில் கடந்த5 தினங்களில் வாகனங்கள் மோதி 3 பேர் உயிரிழந்து உள்ளனர். வேலூர் மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறையினரின் மெத்தன போக்கே இந்த விபத்திற்கு காரணம் என்று வேலூர் நகர மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!