தமிழகம்

கழிஞ்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் நீருக்கு சிறப்பு பூஜை செய்து மலர்தூவி வரவேற்ற வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் !!

72views
வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலாற்று பகுதியில் செல்லும் நீர் காட்பாடி கழிஞ்சூர் ஏரியை நிரப்பி அதன் உபரிநீர் கார்ணாம்பட்டு அருகே பாலாற்றில் கலக்கிறது.
நிரம்பிய ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறும் இடத்தில்வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் தலைமையில் பெண்கள் 108 பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்து மலர்தூவி நீரை வரவேற்றனர். உடன் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!