தமிழகம்

பிரம்மபுரம் காவல்நிலையம் பழைய காட்பாடியில் தற்காலிகமாக திறந்துவைத்த அமைச்சர் துரைமுருகன்

94views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் காவல்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கடந்த ஒரு ஆண்டு முன் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.  ஆனால் பிரம்மபுரம் கிராமத்தில் காவல்நிலையம் அமைக்கப்படவில்லை.  அதற்கு பதிலாக வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பழைய காட்பாடியில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனையில் பழைய கட்டிடத்திற்கு வர்ணம் பூசி நேற்று முன்தினம் மாலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி பின் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எஸ்.பி. மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், துணை மேயர் சுனில்குமார்,1-வது மண்டல குழுத்தலைவர் புஷ்பலதா, பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன், காவல்துறை உயர் அதிகாரிகள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!