தமிழகம்

வேலூரில் துணை இராணுவப் படையினருக்கு நலவாரியம் அமைக்க முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் நலச்சங்கம்கோரிக்கை !!

76views
வேலூர் அடுத்த காட்பாடிசித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பிஎஸ்எப் கேண்டீன் வளாகத்தில் பி.எஸ்.எப்.. 59-வது துவக்க நாள் துவக்க நாள் விழா நடந்தது.  தமிழ் நாடு மாநில தலைவர் எஸ்.கே.சீனிவாசன் தலைமைதாங்கினார். கலந்துகொண்டதாய்மார்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் துணை இராணுவ படையினருக்கு நலவாரியம் அமைக்கவேண்டும், கல்வி இடஒதுக்கீடு .வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கேண்டீனுக்கு மதுபான உரிமம் வழங்க வேண்டும், தமிழ்நாடு தேர்வாணைய வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பயிற்சி மையம். நலச்சங்கத்திற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்..கேந்திர வித்யாலாயா பள்ளி துவக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பழனிச்சாமி, சந்திரன், ராஜேந்திரன்.ஜெயராமன்.சந்திரசேகர், பாண்டியன், இராமன், செல்வம்.பிரபாகரன், பழனி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!