தமிழகம்

வேலூர் மருத்துவ பணியாளர் விபத்தில் மூளைச்சாவு ! உடல்உறுப்புகள் தானம் !!

7views
வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த சத்யா. இவர் தனியார் நர்சரி பள்ளியில் பணியாற்றுகிறார். இவரது மகன் அவினாஷ் கார்த்திக்(30). இவர் பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் நர்சாக பணியாற்றி வருகின்றார். கடந்த 16-ம் தேதி 2 சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்தபோது திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலை தடுப்பில் மோதி படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆனந்தனை வேலூர் அடுத்த இரத்தினகிரி ராணிப்பேட்டை சிஎம்சியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அவர் 16-ம் தேதிசனிக்கிழமை மாலை மூளைச்சாவு அடைந்தார்.  அவரது தாயார் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தார். அதன் படி இதயம், கல்லீரல், நுரையீரல் சிறுநீரகம் என சென்னை அப்போலோ, எம்ஜிஎம் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை சிஎம்சி, நாராயணி மருத்துவமனை என பிரித்து தானமாக வழங்கப்பட்ட.து.
மறைந்த ஆனந்தனின் தங்கை வேலூர் சிஎம்சியில் நர்சாக பணிபுரிகிறார். காலமான ஆனந்தனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!