தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூமை திறந்து வைத்த வேலூர் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன்

74views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புதிய ஷோரூம் அமைத்து உள்ளது.  இதன் திறப்பு விழாவிற்கு இதன் நிர்வாக இயக்குநர் அருண் ஈஸ்வர் தலைமை தாங்கினார். இணை இயக்குநர் அஸ்வின் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா குத்து விளக்கு ஏற்றி வைத்தார். வேலூர் அலங்கார் ஓட்டல் நிர்வாக இயக்குநர் வெங்கடசுப்பு முதல் விற்பனையை துவக்கி வைக்க வேலூர் லட்சுமி ஜூவல்லரி முகுந்த் பெற்றுக் கொண்டார்.

இதில் வேலூர் ராம்ராஜ் காட்டன் மேலாளர்,ஊழியர்கள், வாடிக்கையாளர் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். இதில் ஆண், பெண் இருபாலருக்கும் ஆன அனைத்து வகை துணிகளும் விற்பனை செய்யப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!