தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு !!

48views
தமிழகத்தில் பரவலாக தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள மழை நீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அரசு உத்தரவின் பேரில் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுகளாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்தில் உள்ள 7 -வது வார்டில் உதவி ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள், டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர், அப்போது மழை நீர் தேங்கும் வகையில் தேவையில்லாத டயர், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தாத பாத்திரங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து அப்புறப்படுத்தினர் மேலும் தேவையில்லாத பொருட்களை வீட்டு மாடியில் சேகரித்து வைக்க வேண்டாம் என்று வீட்டில் உரிமையாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. தொடர்ந்து வீடுகளுக்கு கொசு மருந்தும் அடிக்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!