தமிழகம்

வேலூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

30views
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்க முயற்சி செய்வதையும் மேலும் வருமான வரித் துறையினர் ரூ.1823 கோடி அபராதம் செலுத்த கோரி கடிதம் அனுப்பியதை கண்டித்து இந்திய முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு தலைவர் வாகித் பாஷா, எஸ்.சி. பிரிவு தலைவர் சித்ரஞ்சன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் முத்தரசிகுப்பம் பிரேம்குமார், வேலூர் திவாகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!