தமிழகம்

வேலூர் சரக காவல காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம்

79views
வேலூர் அடுத்த காட்பாடிசன்பீம் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் வேலூர் சரக காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.  ‘வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி முன்னிலை வகித்தார்.  வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.  வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் சிறப்புரையாற்றினார்.  கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம்&ஒழுங்கு) சங்கர் தலைமையுரையாற்றினார்.

மாணவ-மாணவிகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துரையாடினர்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.  வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாமரைக்கண்ணன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!