தமிழகம்

கே.வி.குப்பத்தில் பைக்குகள் மோதல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

138views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வேப்பங்கநேரி பிள்ளையார் கோயில்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (18). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிதம் படித்து வருகின்றார்.  கடந்த 14-ம் தேதி இரவு கே.வி.குப்பம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதியதில் ஜெயப்பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.  இதுகுறித்து கே.வி.குப்பம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர் ; வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!