தமிழகம்

வேலூரில் ரூ.80 கோடி மதிப்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை பயணாளிகளிடம் ஒப்படைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

129views
வேலூர் மேல்மொணவூரில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 79 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள் 1591 வீடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
உடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், கலாநிதி, மறுவாழ்வு துறை செயலாளர் நந்தகுமார், ஆணையர் ஜெசிந்தாலால சரஸ், வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, தமிழரசி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார். மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணியாளர்கள் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!